ஞானசாரவுக்கு எதிரான எஞ்சிய தண்டனை காலத்தை நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்குப் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மேன்றையீட்டு நீதிமன்றம் இன்று (5) உத்தரவிட்டுள்ளது.

 

கைதுசெய்யப்படுவதற்காகத் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஞானசார தேரர், சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று மேன்றையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

 

இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம் ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியைச் சிறையில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

ஞானசார தேரருக்கு அணிவிக்கப்பட்ட கைதிக்கான சீருடை

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, கைதிகளுக்குரிய சீருடை நேற்று (05) பிற்பகல் வழங்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.   இதற்கமைய, அவரது காவி...

NBRI அனுமதியின்றியே மலையக ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

புனரமைப்புப் பணிகளின் பின்னர் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் (NBRI) அனுமதி இன்றி மலையக ரயில் பாதையின் போக்குவரத்து நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...