பேராதனை – கொழும்பு கோட்டை கடுகதி ரயில் தடம் புரண்டது

பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த கடுகதி ரயில், கங்கொட மற்றும் கடிகமுவ ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (5) அதிகாலை 4.40 அளவில் தடம் புரண்டுள்ளது.

 

 

 

ரயில் பாதையில் மண் சரிவு மற்றும் கற்கள் விழுந்திருந்தமையினாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதுடன், இதன் காரணமாக மலையகப் பாதையிலான அனைத்து ரயில் சேவைகளும் தாமதமடைந்துள்ளன.

 

 

 

‘டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்டுப் புனரமைக்கப்பட்ட பின்னர், பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த முதலாவது அலுவலக ரயிலே (Office Train) இவ்வாறு தடம்புரண்டுள்ளது.

 

 

 

இந்த விபத்தினால் ரயிலின் முன்பகுதிக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த ரயிலின் சாரதியான டீ.ஏ.பி. செந்தநாயக, “பாதையின் குறுக்கே மண் சரிந்து விழுந்திருந்தது. நாங்கள் அதனைப் பார்க்கும்போது 10 மீற்றர் தூரம்கூட இருக்கவில்லை. மண் திட்டில் மோதியவுடன் ரயில் தூக்கி வீசப்பட்டது. அவ்வாறு மோதிய வேகத்திலேயே பாறையொன்றில் மோதி சேதம் ஏற்பட்டது” எனக் குறிப்பிட்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

ஞானசார தேரருக்கு அணிவிக்கப்பட்ட கைதிக்கான சீருடை

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, கைதிகளுக்குரிய சீருடை நேற்று (05) பிற்பகல் வழங்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.   இதற்கமைய, அவரது காவி...

ஞானசாரவுக்கு எதிரான எஞ்சிய தண்டனை காலத்தை நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்குப் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை...