மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு இன்று (24) திறந்துவிடப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

நீர்த்தேக்கத்தின் நீரேந்து பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

மேல் கொத்மலை நீரேந்து பகுதிகளில் மேலும் கனமழை பெய்யும் பட்சத்தில், நீர்த்தேக்கத்தின் ஏனைய வான் கதவுகளும் தானியங்கி முறையில் திறக்கப்படும்.

 

இதன் காரணமாக, நீர்த்தேக்க அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் அமைந்துள்ள கொத்மலை ஓயாவின் இருமருங்கிலும் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

 

அத்துடன், அப்பகுதியில் பெய்து வரும் பலத்த மழையினால் சென் கிளையார் மற்றும் டெவோன் நீர்வீழ்ச்சிகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது

க்ரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன, இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (24) கைது செய்யப்பட்டுள்ளார்.   குறித்த நிறுவனத்திற்காக, நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச்...

வினாப்பத்திர நெருக்கடி தொடர்பில் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை

கேகாலை பிரதேசத்தில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வினாபத்திரம் தாமதமாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டமை தொடர்பாக மாணவர்களுக்கு நியாயத்தை பெற்றுத்தருவதற்கு அதிகாரிகள் விரைவாக...