Breaking: மட்டக்குளியில் கொடூர வீதி விபத்து: நால்வருக்கு மேல் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!

கொழும்பு, மட்டக்குளி – அளுத்மாவத்தை வீதி, கந்தஉட பகுதிச் சந்தியில் (கொட்டாஞ்சேனை நோக்கிச் செல்லும் வீதி) கொடூர வீதி விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

 

கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியிலிருந்த மூன்று ஆட்டோக்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இவ்விபத்து மிகவும் பாரதூரமானதாக உள்ளதால் நால்வருக்கு மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

 

சம்பவ இடத்தில் இருவர் உயிரிழந்திருப்பதை நேரில் பார்த்தவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இருப்பினும், உயிரிழந்தவர்களின் துல்லியமான எண்ணிக்கை மற்றும் விபத்துக்கான காரணம் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

 

பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

#Mattakkuliya #AccidentNews #SriLankaNews #BreakingNews #ColomboNews #RoadSafety

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

ஞானசார தேரருக்கு அணிவிக்கப்பட்ட கைதிக்கான சீருடை

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, கைதிகளுக்குரிய சீருடை நேற்று (05) பிற்பகல் வழங்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.   இதற்கமைய, அவரது காவி...

ஞானசாரவுக்கு எதிரான எஞ்சிய தண்டனை காலத்தை நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்குப் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை...