ரஷ்யாவில் பயங்கர பனிச்சரிவு: மலையேற்ற வீரர்கள் 11 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவின் வட காகசஸ் பிராந்தியத்தில் அமைந்துள்ள மிஷிர்ஹி மலையில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி, மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் மேலும் 6 பேர் பாய்காயமடைந்துள்ளதுடன், 6 பேர் மாயமாகியுள்ளதாக அவசர கால மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

 

 

மொத்தம் 33 பேரைக் கொண்ட மலையேற்ற வீரர்களின் குழுவினர் மிஷிர்ஹி மலையில் ஏறிக்கொண்டிருந்த போதே, எதிர்பாராதவிதமாக இந்த பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.

 

பனிச்சரிவில் சிக்கியவர்களில் 16 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காணாமல் போன 6 பேரைக் கண்டுபிடிக்கும் நோக்கிலும், மீட்புப் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கிலும் 50-க்கும் மேற்பட்ட சீருடை தரித்த மீட்புக் குழுவினர் மற்றும் ஹெலிகொப்டர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

 

இருப்பினும், மோசமான காலநிலை மற்றும் மீண்டும் பனிச்சரிவு ஏற்படும் அபாயம் காரணமாக தேடுதல் பணியில் பெரும் சவால்கள் நிலவுகின்றன.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ரஷிய விசாரணை ஆணையம் முன்னெடுத்து வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

அமெரிக்கப் போர்க்கப்பலை ஈரான் இருமுறை தாக்கியதற்குப் பதிலடியாக, அந்நாட்டின் ஐந்து எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளையகம்...

அமேசன் சரக்கு விமானம் விபத்து – ஐவர் பலி

மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசன் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சுமார் ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில்...