அமேசன் சரக்கு விமானம் விபத்து – ஐவர் பலி

மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசன் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சுமார் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் மேலும் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

போர்ட்டோ ரிகோவின் சான் ஜுவானில் இருந்து பயணித்த இந்த விமானம், மதியம் 2 மணியளவில் ஓடுபாதையைத் விட்டு விலகி விமான நிலையத்தின் பிற வணிக நிறுவனங்கள் பயன்படுத்தும் வீதியைக் கடந்து சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது அங்கிருந்த வாகனங்களிலும் விமானம் மோதுண்டுள்ள நிலையில் தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்கள் விமானத்தில் இருந்தவர்களா அல்லது விமானம் மோதிய வாகனங்களில் இருந்தவர்களா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வௌியாகவில்லை.

சுமார் 200க்கும் மேற்பட்ட அவசரக்கால பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியை முன்னெடுப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

விஜய் பிரதமர் வேட்பாளரா? அமைச்சர் வழங்கிய பதில்

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை எதிர்கால பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் திட்டம் கட்சிக்கு உள்ளதா என்ற விவாதம் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. ‘இந்தியா...

ஆப்பிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்

ஆப்பிரிக்கக் கண்டத்தின் உண்மையான நிலப்பரப்பை மிகவும் துல்லியமாகப் பிரதிபலிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட புதிய உலக வரைபடத்தைப் பயன்படுத்துவதற்கான பிரேரணை ஒன்று ஐக்கிய நாடுகள்...