இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ கைது

டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற ‘கொண்ட ரஞ்சி’ குற்றப்புலனாய்புத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இன்று (09) காலை 8.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 

‘கொண்ட ரஞ்சி’ இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்றபோதே கடந்த ஜனவரி 09 ஆம் திகதி டுபாயில் கைது செய்யப்பட்டிருந்தார்.

அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினரால் அவருடன் இணைந்து அவரது மனைவியும் குழந்தைகளும் கைது செய்யப்பட்டபோதிலும், பின்னர் மனைவியும் குழந்தைகளும் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச் செயலாளரின் படுகொலைச் சம்பவம் தொடர்பிலும் ‘கொண்ட ரஞ்சி’ பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ஒரு சந்தேகநபர் என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு சிறப்புச் சான்றிதழ் வழங்கி கௌரவம்!

மலேரியா மற்றும் தாய்மார்கள், புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான ரணஜன்னி (Tetanus) நோய்களை வெற்றிகரமாக ஒழித்த நிலையை 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து பேணி வருவதற்காக...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.   ஊவா மாகாணத்திலும்...