kG உடன் முன்னாள் பொலிஸ் அதிகாரி சிக்கினார்

பாரிய அளவிலான கேரள கஞ்சா (KG)பொதிகளுடன் 61 வயதுடைய நபர் ஒருவர் கையும் மெய்யுமாக மடக்கிப் பிடிக்கப்பட்டார். கொஸ்வத்தை – பொத்துவட்டவன பகுதியில் வியாழக்கிழமை (27) மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மேற்கொண்ட ரகசியச் சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரைச் சோதனையிட்டபோது, அவரிடமிருந்து 16 கிலோ 670 மில்லிகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதோடு, போதைப்பொருள் வியாபாரம் மூலம் உழைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 92,783 ரூபாய் ரொக்கப் பணமும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளிலேயே, கைதான நபர் தொடர்பான அதிர்ச்சியூட்டும் பின்னணி வெளிவந்துள்ளது. இவர் 1985 ஆம் ஆண்டு இலங்கைப் பொலிஸ் துறையில் ‘உப சேவை பொலிஸ் கான்ஸ்டபிளாக’ இணைந்து, பின்னர் 1990 ஆம் ஆண்டு சேவையிலிருந்து விலகியவர் என்பது தெரியவந்துள்ளது.

விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சாவும் பணமும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கொஸ்வத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபரை மாரவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், கொஸ்வத்தை பொலிஸார் இந்தப் போதைப்பொருள் வலையமைப்பு குறித்து விரிவான மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

ஆசிரியர் பிக்கு ஐஸூடன் கைது

பிரதான பாடசாலை ஒன்றில் பௌத்த மதம் கற்பிக்கும் தேரர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரகஸ்மந்திய பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து,...

அரச மருந்தாளர் சங்கம் 31 ஆம் திகதி ஒரு நாள் வேலைநிறுத்தம்

அரச மருந்தாளர் சங்கம் வரும் 31 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் ஒரு நாள் தொழிற்சங்க  போராட்டத்தில்  ஈடுபடத் தீர்மானித்துள்ளது. தங்களது...