நெடுந்தீவு படகு அனர்த்தம் – அனைவரும்…

குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு சென்ற படகில் பயணித்தவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என கடற்படை பேச்சாளர் கமாண்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்தார்.

குறித்த படகில் 2 படகோட்டிகள் உட்பட 10 ​பேர் பயணித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு பயணித்த படகு ஒன்று உரிய நேரத்தில் நெடுந்தீவை வந்தடையவில்லை என கடற்படைக்கு தகவல் கிடைத்திருந்தது.

இதனையடுத்து விரைவாக மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், அந்த படகு அனர்த்தத்திற்குள்ளாகியிருந்த போது அதிலிருந்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் ​போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கடற்பகுதி இன்றைய தினம் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் கடற்பயணங்களை தவிர்க்குமாறு முன்னதாகவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்த போதிலும் அதனை பொருட்படுத்தாமல் இந்த படகின் ஊடாக அவர்கள் பயணித்திருந்ததாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

அமேசன் கல்லூரி மற்றும் கேம்பஸின் வளர்ச்சிக்குபுதிய ஆலோசனை சபை -இல்ஹாம் மரிக்கார்...

கல்விச் சிறப்பு, தரமான கல்வி, தொழில்முறை மேம்பாடு மற்றும் நிறுவன வளர்ச்சி ஆகியவற்றில் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வரும் அமேசன் கல்லூரி மற்றும்...

இந்த ஆண்டில் இதுவரை 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்

இவ்வாண்டில் இதுவரை இலங்கையில் 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.   இன்று (15) நடைபெற்ற...