91 ஆயிரத்தை கடந்த டெங்கு நோயாளர்கள்

இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்தை கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, நேற்று (13) வரை நாட்டில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 91,346 ஆக உயர்ந்துள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், டெங்கு நோய் காரணமாக 68 மரணங்களும் இதுவரை பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் கடந்த ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளனர்.

இதன்படி, ஜூலை மாதத்தில் மாத்திரம் 29,968 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதனிடையே, இம்மாதத்தின் நேற்றைய தினம் வரையிலான கடந்த 13 நாட்களில் 6,004 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த ஆண்டின் இதுவரை கழிந்த காலத்தில் அதிகளவிலான நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்தே பதிவாகியுள்ளனர்.

இதன்படி மேல் மாகாணத்தில் 48,383 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதேபோல், தென் மாகாணத்தில் 13,479 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 8,160 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

ஞானசார தேரருக்கு அணிவிக்கப்பட்ட கைதிக்கான சீருடை

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, கைதிகளுக்குரிய சீருடை நேற்று (05) பிற்பகல் வழங்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.   இதற்கமைய, அவரது காவி...

ஞானசாரவுக்கு எதிரான எஞ்சிய தண்டனை காலத்தை நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்குப் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை...