ரத்மலானை கொலைக்கு உதவி புரிந்த இருவர் கைது

ரத்மலானை கந்தவல சந்தைக்கு அருகில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை புரிந்த சந்தேகநபர்கள் இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 1ஆம் திகதி கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்மலானை கந்தவல சந்தைக்கு அருகில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாகக் கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பரந்தளவிலான விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (13) இந்தக் குற்றத்திற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் ஒரு சந்தேகநபர் ரத்மலானைப் பகுதியில் 22 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மற்றொரு சந்தேகநபரை அன்றைய தினமே தெஹிவளைப் பகுதியில் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 41 மற்றும் 48 வயதுடைய தெஹிவளைப் பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

இந்தச் சந்தேகநபர்கள் குற்றத்திற்காகத் துப்பாக்கிகளைக் கடத்திச் சென்றுள்ளமை, அத்துடன் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் மறைந்திருப்பதற்கு தேவையான வசதிகளைச் செய்து உதவி ஒத்தாசை புரிந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

கொள்கை வட்டி வீதத்தை 9.00% ஆக உயர்த்திய இலங்கை மத்திய வங்கி!

நவம்பர் மாதத்தில் நாணயக் கொள்கையை உயர்த்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.     நேற்று (24) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம்...

பிரதமர் ஹரிணியுடன் பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சந்திப்பு

பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹுமையுன் கபீர் தலைமையிலான தூதுக்குழுவினர், பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேற்று (18) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.     இதன்போது,...