8 துறைகளுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பங்கள்…

கொழும்பு:  துணைமருத்துவ சேவைகள் (Para-medical Services) துறையின் கீழ் 8 முக்கிய பிரிவுகளுக்கான பயிற்சித் திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர்  வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

​பின்வரும் 8 தொழிற்துறைகளுக்கான பயிற்சித் திட்டங்களுக்கே இவ்வாறு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன:

​பல் தொழில்நுட்பவியலாளர் (Dental Technician)

பொது சுகாதார பரிசோதகர் (Public Health Inspector – PHI)

​செயற்கை அவயவ தொழில்நுட்பவியலாளர் (Prosthetist and Orthotist)

​சுகாதார பூச்சியியல் அதிகாரி (Health Entomology Officer)

​பாடசாலை பல் சிகிச்சை நிபுணர் (School Dental Therapist)

​மின் இதய வரைபடக் கலைஞர் (Electro Cardiographer – ECG Technician)

​மருந்து வழங்குநர் (Dispenser)

​மின் மூளை வரைபடக் கலைஞர் (Electro Encephalographer – EEG Technician)

​இது தொடர்பாக அமைச்சர் தனது உத்தியோகபூர்வ முகநூல் (Facebook) பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

​அதில், இந்த பயிற்சித் திட்டங்களுக்குத் தேவையான கல்வித் தகுதிகள், தொழில்முறைத் தகுதிகள் மற்றும் மேலதிக விபரங்கள் 2026 ஆகஸ்ட் 07 ஆம் திகதியிடப்பட்ட 2501 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் (Gazette Extraordinary) வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளதை அடுத்து, இன்று (9) இரவு 7 மணியளவில் நீர்த்தேக்கத்தின் ஒரு...

நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, நாளை (10) மற்றும் நாளை மறுதினம் (11) ஆகிய இரு தினங்களில் சுகயீன...