கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளதை அடுத்து, இன்று (9) இரவு 7 மணியளவில் நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு சிறியளவில் திறக்கப்பட்டுள்ளது

இதன் மூலம் வினாடிக்கு சுமார் 20 கனமீற்றர் என்ற வேகத்தில் மேலதிக நீர் கொத்மலை ஓயாவுக்கு திறந்து விடப்படுவதாக இலங்கை மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, நீர்த்தேக்கத்தின் தாழ்நில பகுதியிலுள்ள கொத்மலை ஓயா மற்றும் மகாவலி கங்கையின் நீர்மட்டம் சிறிதளவு உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, குறித்த ஆற்றுப் படுகைகளை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் செயல்படுமாறு, கொத்மலை பிரதான அணைக்கட்டு மற்றும் நீர்த்தேக்க செயல்பாட்டுப் பிரிவின் கடமை நேரப் பொறியியலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

ஞானசார தேரருக்கு அணிவிக்கப்பட்ட கைதிக்கான சீருடை

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, கைதிகளுக்குரிய சீருடை நேற்று (05) பிற்பகல் வழங்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.   இதற்கமைய, அவரது காவி...

ஞானசாரவுக்கு எதிரான எஞ்சிய தண்டனை காலத்தை நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்குப் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை...