நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, நாளை (10) மற்றும் நாளை மறுதினம் (11) ஆகிய இரு தினங்களில் சுகயீன விடுமுறையை அறிவித்து பணிக்கு சமூகமளிக்காமல் இருக்க கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானித்துள்ளனர்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க இதனைத் தெரிவித்தார்.

கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் 600 ரூபாய் பயணக் கொடுப்பனவு கடந்த 8 வருடங்களாக உயர்த்தப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

2024ஆம் ஆண்டில், குறித்த கொடுப்பனவுக்குப் பதிலாக 20 லீட்டர் எரிபொருளுக்கு நிகரான கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருந்தது.

இருப்பினும், இதுவரை அக்கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை (10) மற்றும் நாளை மறுதினம் (11) சுகயீன விடுமுறை அறிவித்து பணிக்குச் சமூகமளிக்காது தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக நந்தன ரணசிங்க தெரிவித்தார்.

இதன்படி, இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

8 துறைகளுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பங்கள்…

கொழும்பு:  துணைமருத்துவ சேவைகள் (Para-medical Services) துறையின் கீழ் 8 முக்கிய பிரிவுகளுக்கான பயிற்சித் திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர்  வைத்தியர்...

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளதை அடுத்து, இன்று (9) இரவு 7 மணியளவில் நீர்த்தேக்கத்தின் ஒரு...