உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு தடை!

2026 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், பாட ரீதியான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவது ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு செய்யப்பட வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இதற்கமைவாக, குறித்த பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இக்காலப்பகுதியில் உயர்தரப் பரீட்சைக்கான அனுமான வினாக்களை உள்ளடக்கிய மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் அவற்றை விநியோகித்தல் என்பனவற்றை மேற்கொள்ள முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், பரீட்சை வினாத்தாள்களுக்கான வினாக்கள் வழங்கப்படும் அல்லது அதற்கு நிகரான வினாக்கள் வழங்கப்படும் என சுவரொட்டிகள், பதாதைகள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் மின்னணு அல்லது அச்சு ஊடகங்களில் விளம்பரப்படுத்துவது அல்லது அவ்வாறான பொருட்களைத் தம்வசம் வைத்திருப்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.

 

2026 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை 2026 ஓகஸ்ட் 10 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 05 ஆம் திகதி வரை 2532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

தொடர் பணிப்புறக்கணிப்பிற்கு செல்ல தயாராகும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்

இலங்கைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது. அச்சங்கத்தின் செயற்குழு இன்று (19) பிற்பகல் கூடி இது...

முன்னாள் எம்.பியின் மனைவி மாடியிலிருந்து விழுந்து பலி

மொனராகலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி டேஷானி குணரத்ன திடீர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தணமல்வில பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது, வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததில் அவர்...