நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் இன்று (21) பாடசாலைகளை நடத்துவது குறித்துத் தீர்மானிக்கும் அதிகாரம் அந்தந்த மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தி நடவடிக்கைகளை எடுக்குமாறும், வௌியிடப்படும் புதிய அறிக்கைகள் குறித்தும் அதிக அவதானம் செலுத்துமாறும் அவர் தெரிவித்துள்ளார்.


