ரஷ்ய தலைநகரை குறி வைத்து 1,000 ட்ரோன்கள் ஏவி உக்ரைன் தாக்குதல்

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது இதுவரை இல்லாத வகையில் ஒரே இரவில் 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி உக்ரைன் உக்கிரமான தாக்குதல் நடத்தியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்.

 

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் 5-வது ஆண்டாக நீடிக்கிறது. குறிப்பாகக் கடந்த சில மாதங்களாகப் பொது உள்கட்டமைப்புகள், எண்ணெய் நிறுவனங்கள், துறைமுகங்கள், கிடங்குகள் உள்ளிட்டவற்றைக் குறி வைத்து இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், ரஷ்யத் தலை நகர் மாஸ்கோவைக் குறி வைத்து உக்ரைன் ஒரே இரவில் 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி தாக்குதலை நடத்தியுள்ளது. போர் தொடங்கியதற்குப் பிறகு மாஸ்கோ மீது உக்ரைன் நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் இதுவாகும். குறிப்பாக, ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலின் 3-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு நேற்று நடைபெற்ற நிலையில், மாஸ்கோவைக் குறி வைத்து உக்ரைன் இந்தத் தாக்குதலை நடத்தி உள்ளது.

மாஸ்கோவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்த ஆலையில் தீப்பற்றி வானுயரத்துக்குப் புகை மண்டலம் எழுந்தது. மாஸ்கோவின் குடியிருப்புப் பகுதிகளையும் உக்ரைன் ட்ரோன்கள் தாக்கின. இதில் 2 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

ஹூதிகளை கட்டுப்படுத்த ஈரானிடம், சீனா கோரிக்கை

ஈரானின் ஆதரவு பெற்ற யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த உதவுமாறு சீனா, ஈரானிடம் ரகசியமாக கோரியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.   ஹூதிகள் கடந்த வாரம் மேற்கொண்ட...

அவுஸ்திரேலியா செல்லும் சர்வதேச மாணவர்களுக்கு அதிர்ச்சி

சர்வதேச மாணவர்கள் கல்வி பயிலும் காலத்தில் அவர்களின் துணைவர்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து வருவதைத் தடுக்கவும், தற்காலிக குடியேற்ற விசாக்களை மாற்றுவதற்கான விதிகளை...