ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சட்டத்தரணி ஹபீப் றிபான் நியமனம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு கல்குடா மண்ணிலிருந்து சட்டத்தரணி ஹபீப் றிபான் பெயரிடப்பட்டுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.எஸ். வாசித் அவர்களின் இராஜினாமாவைத் தொடர்ந்து உருவான வெற்றிடத்திற்கே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அவர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினரான சட்டத்தரணி ஹபீப் றிபான் அவர்களின் பெயரை தேர்தல் ஆணைக்குழுவிற்கு சிபாரிசு செய்துள்ளார்.

கல்குடா மண்ணுக்குக் கிடைத்துள்ள இப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக கடற்படை தயார் நிலையில்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அனர்த்த நிவாரணப் பணிகளுக்காகக் கடற்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.   அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கடற்படை, பாதிக்கப்பட்ட...

நாடளாவிய ரீதியில் 38 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 38 பாடசாலைகளுக்கு இன்று (21) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.   அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவ்வமைச்சு,...