பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் குறைப்பு

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, உணவக உணவுகளின் விலைகளும் குறைக்கப்படுவதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஒரு பொதி உணவு (சோறு) 15 ரூபாவினாலும், பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலைகள் 15 ரூபாவினாலும், சிற்றுண்டிகள் 5 ரூபாவினாலும், பராட்டா 5 ரூபாவினாலும், முட்டை ரொட்டி 5 ரூபாவினாலும், பால் தேநீர் 5 ரூபாவினாலும் தேநீர் 5 ரூபாவினாலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

கொள்கை வட்டி வீதத்தை 9.00% ஆக உயர்த்திய இலங்கை மத்திய வங்கி!

நவம்பர் மாதத்தில் நாணயக் கொள்கையை உயர்த்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.     நேற்று (24) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம்...

பிரதமர் ஹரிணியுடன் பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சந்திப்பு

பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹுமையுன் கபீர் தலைமையிலான தூதுக்குழுவினர், பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேற்று (18) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.     இதன்போது,...