இந்தாண்டு இலங்கையில் வெளிநாட்டு வேலைகளுக்காக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வெளியிட்டுள்ளார்.
அமைச்சரின் கருத்துப்படி, 23 ஜூலை 2022 நிலவரப்படி, 166,719 நபர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்துள்ளனர்.
உணவு, மருந்து மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கும், அந்நிய செலாவணி வருவாயை அதிகரிப்பதற்கும், வெளிநாட்டு வேலைவாய்ப்பையும், சட்டப்பூர்வ வழிகளின் மூலம் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவதையும் மேம்படுத்துவதற்கு இலங்கை எதிர்பார்ப்பதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.