Date:

அமெரிக்காவினால் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை

அமெரிக்காவினால் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இணைக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தகவல்களை மேற்கோள் காட்டி, இலங்கையில் உள்ள சீன தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக பொருளாதாரத் தடைகளை விதிக்கும் அதேவேளை அதிகார வரம்பை மீறி பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

அதன்படி இலங்கை, இந்தியா, சீனா உள்ளிட்ட 27 நாடுகள் அமெரிக்காவின் தடைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக ரஷ்யாவிலிருந்து பில்லியன் கணக்கான டொலர் மதிப்புள்ள எஸ் -400 ஏவுகணைகளை பெற்றுக் கொண்டமை காரணமாக இந்தியாவும் பொருளாதார தடைகளை எதிர்கொண்டுள்ளதாக சீன தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

முஸ்லிம்களைப் பொறுத்த வரை மொட்டு உடன் கொல்லும் விஷம்`. திசைகாட்டி மெல்லக் கொல்லும் விஷம் – இம்ரான் எம். பி

இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்த வரை மொட்டு அரசாங்கம் உடன் கொல்லும் விஷம்`....

ஐ.தே.க முக்கியஸ்தர்களை சந்தித்தார் சஜித்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, உப தலைவர்...

பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை…

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை...

நாளை கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

2026 புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக நாளை (31) கொழும்பு நகருக்கு, வெளி மாகாணங்களில்...