Date:

மரணத்திற்கு நீதி கோரி ஜனாதிபதியிடம் மஹஜர்

டயகம சிறுமி ஹிசாலினியின் மரணத்திற்கு நீதி கோரி ஜனாதிபதியிடம் மஹஜர் ஒன்றை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டயகம 3 ஆம் பிரிவை சேர்ந்த ஜூட்குமார் ஹிசாலினி முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதினின் வீட்டுக்கு வேலைக்காகச் சென்ற நிலையில் கடந்த 15 ஆம் திகதி எரிகாயங்களுடன் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவத்திற்கு எதிராக மலையகத்தின் பல பகுதிகளிலும் போராட்டங்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஹட்டன் மெத்தடிஸ் சிறுவர் இல்லத்தில் சிறுவர்கள் ஜனாதிபதியிடம் மஹஜர் ஒன்றை கையளிப்பதற்காக நேற்று மாலை கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டனர்.

டன்பார் வீதியில் ஹட்டன் ஹைலன்ட் கல்லூரிக்கு அருகாமையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அமெரிக்க விமானத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

மத்திய கிழக்கிலுள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான அல் உதைத் (Al...

‘ஈரானுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை’

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டன எனவும் இனி எவ்வித சமரசத்திற்கும்...

ஈரானில் உலகப் பாரம்பரியத் தளம் சேதம் – UNESCO கவலை!

யுனெஸ்கோ அமைப்பால் உலகப் பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்ட, தெஹ்ரானில் உள்ள...

போர் பதற்றத்தால் தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள்...