Date:

கறுப்பு யூலை; யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

தமிழர்கள் மீதான அரசின் இனப்படுகொலைக்கு நீதி கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று  முன்னெடுக்கப்பட்டது.

கருப்பு ஜூலை 23 நினைவு நாளை நினைவுகூர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை  இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்,  கறுப்பு ஜூலை தமிழினப் படுகொலை நாள், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே?, இன அழிப்புக்கு நீதி வேண்டும்,  அரசியல் கைதிகளை விடுதலை செய், வெளியேறு இராணுவமே வெளியேறு உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பினர்.

குறித்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இந்தியா நோக்கி பயணமானார் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21) காலை கட்டுநாயக்க விமான...

தென் கடலில் பிடிபிட்ட போதைப்பொருளின் அளவு வௌியானது

தென் கடற்பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகில் இருந்து மீட்கப்பட்ட போதைப்...

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியிலேயே கட்டுப்படுத்தினோம்

நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி...

மாளிகாவத்தை மதரஸா ; 2 மௌலவிகள் கைது

மாளிகாவத்தை பகுதியில் உள்ள மதரஸா ஒன்றில் கடமை புரியும் 2 மௌலவிகள்...