Date:

மேலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன

தற்போது அமுலாக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளில் சிலவற்றை தளர்த்தும் நோக்கில் புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.

இன்றைய தினத்திலிருந்து அமுலாகும் வகையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் குறித்த சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி சிறுவர் பூங்காக்கள், விலங்குகள் சரணாலயங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், மிருககாட்சிசாலைகளை பார்வையிட ஒரு தடவையில் 25 வீதமானவர்களுக்கே அனுமதியளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளக இசைநிகழ்ச்சிகளை மண்டப கொள்ளளவில் 50 சதவீத பார்வையாளர்களுடன் நடாத்தவும் புதிய சுகாதார வழிகாட்டியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், திறந்த வெளியரங்கு களியாட்ட மற்றும் இசை நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை

விளையாட்டு மற்றும் விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவக்கூடிய விதமான விளையாட்டுகள் தவிர்ந்த ஏனையவற்றுக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிரபல பாடகர் தமித் அசங்க திடீர் கைது

பிரபல பாடகர் தமித் அசங்கவை வெல்லவாய பொலிஸார் கைது செய்துள்ளனர். குடும்ப தகராறு...

பொத்துவிலில் கோர விபத்து – ஒருவர் பலி, பலர் காயம்

பொத்துவில் பகுதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கோமாரி பகுதியில் பாலம்...

கண்டி – பேராதனை ரயில் சேவைக்கு மட்டுப்பாடு

பேராதெனியவிற்கும், கண்டிக்கும் இடையில் ரயில் பாதையில் மேற்கொள்ளப்படும் அவசர பராமரிப்பு பணிகள்...

நாவின்ன துப்பாக்கிச் சூடு : 39 வயது சந்தேக நபர் கைது

மஹரகம, நாவின்ன சந்திக்கு அருகிலுள்ள ஹைலெவல் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்து...