Date:

இலங்கையில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கத் திட்டம்

மின்சார  வாகனங்களின்  பயன்பாட்டை  ஊக்குவிப்பதற்கான  மூலோபாய திட்டத்திற்கு  அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

60 சதவீத காற்று மாசுபாடு  வாகனங்களில் இருந்து  வெளியாகும் புகைகளினால்  ஏற்படுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.

மொரட்டுவ பல்கலைக்கழகம், மற்றும் பிற நிறுவனங்கள்  மேற்கொண்ட  பல ஆராய்ச்சிகளில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது பாவனையில் உள்ள வாகனங்களில் கணிசமானவை  10 ஆண்டுகளுக்கு   மேலானவை. இதுபோன்ற பழைய வாகனங்கள்  முறையாக  பராமரிக்காத காரணத்தினால்  விஷ வாயு வெளியேற்றத்திற்கு வழி வகுக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

 

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின்  தரவின் படி 2020ஆம் ஆண்டு இறுதியில்  பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை  8 மில்லியனை கடந்துள்ளது. ஆகவே வளி மாசடைவதை தடுப்பதற்கு  மின்சார வாகனங்களின்  பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கு   சுற்றாடற்துறை அமைச்சு முன்வைத்த யோசனைக்கு  அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்

அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்கைநெறிகளை மேற்கொள்வதற்காக மேலும் 5,000 மாணவர்களுக்கு...

ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்ட இரண்டாவது ஒருநாள் போட்டி

நியூஸிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி, கிறைஸ்ட்சர்சில் தொடர்ச்சியாக...

கேக் கொள்வனவு செய்வதை தவிருங்கள்! இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டில் வெதுப்பகங்களில் உற்பத்தி செய்யும் கேக் தொடர்பில் சிக்கல் நிலை தோற்றுவித்துள்ளது. இந்தியாவில்...

PUCSL தலைவர் பதவியில் இருந்து நீக்கம் – குற்றச்சாட்டை மறுக்கும் ஜனக

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் பதவியில் இருந்து தாம் நீக்கப்படுவதற்கு...