Date:

இலங்கையில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கத் திட்டம்

மின்சார  வாகனங்களின்  பயன்பாட்டை  ஊக்குவிப்பதற்கான  மூலோபாய திட்டத்திற்கு  அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

60 சதவீத காற்று மாசுபாடு  வாகனங்களில் இருந்து  வெளியாகும் புகைகளினால்  ஏற்படுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.

மொரட்டுவ பல்கலைக்கழகம், மற்றும் பிற நிறுவனங்கள்  மேற்கொண்ட  பல ஆராய்ச்சிகளில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது பாவனையில் உள்ள வாகனங்களில் கணிசமானவை  10 ஆண்டுகளுக்கு   மேலானவை. இதுபோன்ற பழைய வாகனங்கள்  முறையாக  பராமரிக்காத காரணத்தினால்  விஷ வாயு வெளியேற்றத்திற்கு வழி வகுக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

 

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின்  தரவின் படி 2020ஆம் ஆண்டு இறுதியில்  பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை  8 மில்லியனை கடந்துள்ளது. ஆகவே வளி மாசடைவதை தடுப்பதற்கு  மின்சார வாகனங்களின்  பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கு   சுற்றாடற்துறை அமைச்சு முன்வைத்த யோசனைக்கு  அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜனவரியில் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் பணவீக்கம்…

2026 ஜனவரி மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மற்றும் கொழும்பு நகர்ப்புற...

தேசிய குத்துச்சண்டை செம்பியன்ஷிப்பில் ஆட்டநிர்ணய சர்ச்சை!

தேசிய குத்துச்சண்டை செம்பியன்ஷிப் போட்டிகளில் ஆட்டநிர்ணயம் மற்றும் ஊழல் இடம்பெறுவதாக சுமத்தப்பட்ட...

ராஜித்தவுக்கு எதிரான முறைப்பாடு மீண்டும் விசாரணைக்கு

கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டமொன்றை கொரிய நிறுவனமொன்றுக்கு வழங்கியதன்...

அதிரடியாக குறைந்த தங்க விலை !

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, உள்நாட்டு தங்க விலைகள்...