Date:

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம்,பாகிஸ்தான் தேசிய தினத்தை கொண்டாடியது

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம், 23 மார்ச் 2022 அன்று பாகிஸ்தான் தேசிய தினத்தை கொண்டாடியது

பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கையை வாழ் பாகிஸ்தான் சமூகத்தினர், முற்போக்கு நோக்கம் கொண்ட , ஜனநாயக மற்றும் நலன்புரி நாடாக பாகிஸ்தானை மாற்றல் என்ற தொனிப்பொருளில் பாகிஸ்தான் தேசிய தினத்தை இன்று கொண்டாடியது. பாகிஸ்தானின் நிறுவனர் குவாய்ட் இ ஆசாம் முகமது அலி ஜின்னாவின் ஈடு இணையற்ற தலைமையின் கீழ் நமது தலைவர்கள் ஒன்றிணைந்து நடத்திய போராட்டத்தின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 ஆம் திகதி பாகிஸ்தானின் தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. தேசிய தீர்மானத்தை புத்துயிர் அளித்து, தைரியத்துடனும் உறுதியுடனும் அனைத்து சவால்களுக்கும் எதிராக உறுதியாகவும், வலுவாகவும், ஒன்றுபட்டு நிற்கும் நாளாகவும்  பாகிஸ்தான் இந்த நாளை கருதுகிறது.

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) உமர் ஃபரூக் பர்கி எச்ஐ (எம்) அவர்கள் இன்று காலை பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற விழாவில் பாகிஸ்தானின் தேசிய கீதம் இசைக்கும் தருணத்தில் பாகிஸ்தான் கொடியை ஏற்றி விழாவை ஆரம்பித்து வைத்தார். உயர் ஸ்தானிகர்  கருத்துத்தெரிவிக்கையில், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளுடன் (OIC)  சேர்ந்து பாகிஸ்தானின் முயற்சிகளை சுட்டிக்காட்டியதோடு, குறிப்பாக, பாகிஸ்தானின் முயற்சியால் மார்ச் 15 ஐ “இஸ்லாமிய வெறுப்பை எதிர்த்துப் போராடுவதற்கான சர்வதேச தினம்” என்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் அறிவிக்கப்பட்டமை குறித்தும் விளக்கப்படுத்தினார். “ஒற்றுமை, நீதி மற்றும் வளர்ச்சிக்கான கூட்டாண்மைகளை உருவாக்குதல்”  என்ற கருப்பொருளில், 2022 மார்ச் 22-23 திகதிகளில் இஸ்லா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

இன்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

முன்னாள் அமைச்சர் கெஹலியவின் புதல்வி சமித்ரிக்கு பிணை

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு...

ஈரானிலிருந்து வெளியேற அமெரிக்க பிரஜைகளுக்கு டிரம்ப் அறிவிப்பு

ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள், உடனடியாக அங்கு வந்து வெளியேற வேண்டும்...

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் கைது!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகளான சமித்ரி ரம்புக்வெல்ல இலஞ்ச...