Date:

உலக டெஸ்ட் சாம்பியன் மகுடம் சூடியது நியூசிலாந்து

உலக டெஸ்ட் கிரிக்கட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் நியூசிலாந்து அணி மகுடம் சூடிக்கொண்டது.

இங்கிலாந்தின் சவுத் ஹெம்டனில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணியை எட்டு விக்கட்டுகளினால் வீழ்த்தி நியூசிலாந்து உலக டெஸ்ட் கிரிக்கட் சாம்பியனாக மகுடம் சூட்டிக் கொண்டுள்ளது.

முதன் முறையாக நடைபெற்ற போட்டித் தொடரில் நியூசிலாந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இறுதிப் போட்டிக்கு மழை குறுக்கீடு செய்திருந்த காரணத்தினால் மேலதிக நாhளில் இன்றைய தினம் போட்டி நடாத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மகுடம் சூடப்போவது யார்? இந்தியா - நியூசிலாந்து  அணிகள் பலப்பரீட்சை - Ungalboomi

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுகளையும் இழந்து 217 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் ரஹானே 49 ஓட்டங்களையும் கோலி 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் கையில் ஜாமிஸன் 31 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கட்டுகளை வீழ்த்தினார்.
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுகளையும் இழந்து 249 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதில், டெவொன் கொன்வே 54 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 49 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் முஹமட் ஷமி 4 விக்கட்டுகளையும், இசான்த் சர்மா 3 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுகளையும் இழந்து 170 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

இதில், ரிஷப் பன்ட் 41 ஓட்;டங்களையும் ரோஹித் சர்மா 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் ரிம் சவுத்தி 4 விக்கட்டுகளையும், ட்ரனெ;ட் போல்ட் 3 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன்படி, 139 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 45.5 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்து 8 விக்கட்டுகளினால் வெற்றியீட்டியது.

இதில் அணித் தலைவர் கேன் வில்லியம்சன் 52 ஓட்டங்களையும் ரோஸ் டெய்லர் 47 ஓட்டங்கiயும் ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் அஸ்வின் இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இதன்படி, உலக டெஸ்ட் கிரிக்கட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் முதல் தடவையாக சாம்பியன் பட்டம் வென்ற அணியாக நியூசிலாந்து அணி வரலாற்று சாதனை மிகு வெற்றியை ஈட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மத்திய வங்கியில் மாயமான 50 இலட்சம் ரூபா பணம் – பல கோணங்களில் விசாரணை

மத்திய வங்கியில் காணாமல் போன 50 இலட்சம் ரூபா தொடர்பில் பல...

ICC தடை தொடர்பில் வௌியான புதிய கதை!

இலங்கை கிரிக்கட் நிறுவனத்துடன் சர்ச்சையில் சிக்கிய விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை...

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு விவகாரம் – 5 ஆம் திகதி விசாரணை!

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு விவகாரத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05...

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

இரண்டு மூன்று நாட்களுக்குள் 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண...