“நாளை மீள்கிறது இலங்கை”

இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச பிணைமுறி உரிமையாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் வியாழக்கிழமை (19) நடைபெறவுள்ளதாகவும், அதன் பின்னர் இலங்கையின் வங்குரோத்து நிலை முற்றாக முடிவடைந்து அனைத்து நாடுகளினதும் ஆதரவு மீண்டும் நாட்டுக்குக் கிடைக்கும் எனவும்...

கொழும்பில் விஷேட போக்குவரத்து திட்டம்

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரதான வேட்பாளர்களின் இறுதிக் கூட்டங்கள் இன்று (18) பிற்பகல் கொழும்பு மற்றும் பல புறநகர்ப் பகுதிகளில் நடைபெறவுள்ளன. பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க,சஜித் பிரேமதாச, அநுர குமார...

அனுரவை பதற்றமடைய வைத்த புறா

பாறுக் ஷிஹான் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்கவினை புறா ஒன்றின் மூலம் பதற்றமடைய காரணமான இருவர் எச்சரிக்கை செய்யப்பட்டு சம்மாந்துறை பொலிஸாரினால் விடுவிக்கப்பட்டுள்ளனர். தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்டத்திற்கான  சம்மாந்துறை  தொகுதியில்  தேர்தல் பிரச்சார கூட்டம் க  வெள்ளிக்கிழமை(13)  நடைபெற்றிருந்தது. இதன் போது அதிகளவான மக்கள் மத்தியில்  ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க உரையாற்றி கொண்டிருந்தார். இதன் போது அவர் உரையாற்றி கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மேடையை அண்மித்த  வானத்தில் இருந்து சிவப்பு நிற மின்னொளி  பாய்ச்சப்பட்டு ஏதோவொரு மர்மபொருள்  நகர்ந்து வந்துள்ளது. இந்நிலையில் இக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த  தேசிய மக்கள் சக்தியின் தலைவரும்  ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க  உடனடியாக உசாரடைந்ததுடன் தனது பாதுகாப்பு அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய   பாதுகாப்பிற்காக  மேடையில் இருந்து சிறிது நேரம்  அகற்றப்பட்டார். பின்னர் கூட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று முடிவடைந்த பின்னர் சம்பவம் தொடர்பில்   சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்  வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸ்  குழுவினர்  விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இதன் போது கூட்டம் நடைபெற்ற பகுதியில்   இருந்து   LED LIGHT   பொருத்திய 'புறா' பறந்து சென்றதை விசாரணை ஊடாக அறிந்ததுடன் அப்பகுதியில் புறா வளர்ப்பில் ஈடுபடும்  18 மற்றும் 19 வயது  மதிக்கத்தக்க இரு இளைஞர்களை  திங்கட்கிழமை (16)   கைது செய்து  விசாரணை செய்தனர். இதன் போது கைதானவர்கள் சமூக ஊடகங்களில் காணொளியை பதிவு செய்வதற்காக இரவு வேளையில் புறாவின்  காலில் ஒரு வகையான மின் குமிழினை   பொருத்தி   அதனை தினமும் பறக்க விடுவதாக தமது   வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். அத்துடன்  கைதான இருவரையும்  சம்மாந்துறை பொலிஸார் எச்சரிக்கை செய்து  விடுதலை செய்ததுடன்  சசம்பவம்  தொடர்பில்  மேலதிக விசாரணைகளை   மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவரின் தந்தையார் ஓய்வு பெற்ற  முன்னாள் பொலிஸ்  உத்தியோகத்தர்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தல் – இறுதி தேர்தல் பேரணிகள் இன்று!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களின் இறுதிக் கூட்டங்கள் இன்று கொழும்பு மற்றும் வெளிமாவட்டங்களில் நடைபெறவுள்ளன.   சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் "ரணிலால் முடியும்" பிரச்சாரக் கூட்டங்கள் இன்று நடைபெறவுள்ளன. அதன்படி,...

பரீட்சை திணைக்கள அருகில் பதற்ற நிலை

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் இருந்து 03 வினாக்களை நீக்கி இறுதி புள்ளிகளை கணக்கிடுவதற்காக பரீட்சை திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது (18) பெற்றோர்கள், பரீட்சை திணைக்களத்திற்கு...

கொழும்பில் நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது

கொழும்பு 15 பிரதேசத்தில் வீடொன்றில் அச்சுறுத்தி 14 இலட்சம் ரூபா கப்பம் பெற்ற 04 பொலிஸ் உத்தியோகத்தர்கள் முகத்துவாரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புளூமண்டல் பொலிஸில் கடமையாற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள், ஒரு சார்ஜன்ட் மற்றும்...

வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்களுக்கான அறிவிப்பு

இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள், இன்று (18) முதல் தேர்தல் நடைபெறும் தினம் வரை தமது பிரதேசத்திலுள்ள தபால் நிலையத்திற்குச் சென்று வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என பிரதி...

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வாக்களிப்பதற்கு விடுமுறை

  பல்கலைக்கழகங்களின் பணியாட்குழுவினருக்கும் மாணவ, மாணவிகளுக்கும் வாக்களிப்பதை இலகுபடுத்தும் வகையில் விடுமுறை வழங்குதல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை