இலக்கிய மாதத்தையொட்டி 25 ஆவது தடவையாக கொழும்பு
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்படும் ‘கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியை’ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று(28) பார்வையிட்டார்.
அதன்போது இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர்...
2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான அனைத்து வருமான வரி செலுத்துதல்களும் செப்டம்பர் 30 திங்கட்கிழமைக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
வருமான வரி செலுத்த தவறும் அல்லது தாமதப்படுத்தும் நபர்கள் சட்டரீதியான...
இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.
அதன்படி, ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...
சகல தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் இன்றைய தினம் கொழும்பில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஒழுங்குப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்...
லெபனானில் வசிக்கும் இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அந்நாட்டுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
அங்கு வசிக்கும் இலங்கையர்களுடன் தூதரம் நெருங்கிய தொடர்பிலுள்ளதாகவும் தூதுவர் கபில ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 7,600 இலங்கை பணியாளர்கள் லெபனானில் பணி புரிந்து...
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை சந்தித்துள்ளார்.
இலங்கையின் அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் இந்திய இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தனது 74 ஆவது வயதில் காலமானார்.
தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக அன்னாரின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
நுகர்வோருக்கான மின்சார கட்டணத்தை குறைக்கும் திட்டத்தில் பகுப்பாய்வு ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
பகுப்பாய்வின் அறிக்கை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் கலாநிதி...