புலமைப்பரிசில் பரீட்சை உயர்தர பரீட்சை திகதி வௌியீடு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை நடைபெறும் தினத்தை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது. அதன் படி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் மாதம் 5 திகதியும், உயதரப்பரிச்சை ஒக்டோபர் மாதம்...

அனைத்து வகையான வீசாக்களின் காலாவதியாகும் திகதி நீடிப்பு

இலங்கையில் உள்ள வௌிநாட்டவர்களின் அனைத்து வகையான வீசாக்களின் காலாவதியாகும் திகதி நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும்  ஓகஸ்ட் 08 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்றத்தில் 03 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல்

தனிமைப்படுத்தல் சட்டத்தைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்வதை சவால் செய்து ஐக்கிய மக்கள் சக்தியால் உயர் நீதிமன்றத்தில் 03 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் ​செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளருக்கு கொரோனா

இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் கிராண்ட் ஃப்ளவர் இங்கிலாந்திலிருந்து திரும்பிய பின்னர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

கொரோனா வைரஸினால் மேலும் 40 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 40 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, 11 பெண்களும் 29 ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின்...

கரையோர பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக மொஹான் டி சில்வா சத்தியப்பிரமாணம்

கரையோர பாதுகாப்பு மற்றும் தாழ்நில அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக மொஹான் டி சில்வா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில்  சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இராஜாங்க அமைச்சராக சசீந்திர ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம்

சேதன பசளை உற்பத்தி ஊக்குவிப்பு, விநியோக ஒழுங்குப்படுத்தல், நெல் மற்றும் தானியங்கள், சேதன உணவு, மரக்கறி, பழங்கள், மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு உற்பத்தி ஊக்குவிப்பு, விதை உற்பத்தி மற்றும் உயர்தொழில்நுட்ப விவசாய இராஜாங்க...

அனைவரது ஒத்துழைப்பும் வேண்டும்

பொது மக்களின் அவசியங்களுக்கே அரசாங்கமும் தானும் முன்னுரிமை வழங்குவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தனக்கு அனைவரது...