மேலும் 891பேருக்கு கோவிட் தொற்று

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 891 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 603,654 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்றால் 17 பேர் பலி!

நாட்டில் மேலும் 17 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(24) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால்...

இலங்கை மின்சார சபைக்கு புதிய பொது முகாமையாளர்

இலங்கை மின்சார சபையின் புதிய பொது முகாமையாளராக கலாநிதி ரோஹந்த அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினால் பல வாரங்களாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் காரணமாக, இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளர்...

பிரதமருக்கு அறுவை சிகிச்சை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று சத்திரசிகிச்சைக்காக கொழும்பில் உள்ள முன்னணி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வாயில் சிறிய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் சத்திரசிகிச்சைக்குப் பின்னர் பிரதமர்...

ஜனவரி 27 ஆம் திகதி வரை மின்வெட்டு இல்லை

போதியளவான எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ள காரணத்தினால் ஜனவரி 27 ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 216 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 216 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 576,540 ஆக அதிகரித்துள்ளது.

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு

இன்றைய தினம் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பணியாளர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் பல வரிகளை அறவிடுவதற்கான பொறுப்பை திறைசேரிக்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்கள் இந்த அடையாள...

மீண்டும் சிரேஷ்ட பொலிஸ் ஊடக பேச்சாளராக அஜித் ரோஹண 

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண  மீண்டும் சிரேஷ்ட பொலிஸ் ஊடக பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.