சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,
மு.ப. 09.30 - மு.ப. 10.00 - பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்.
மு.ப. 10.00...
தற்போது நிலவும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையைக் கருத்திற்கொண்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு...
தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில் அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் புதன்கிழமை (17) முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில்...
தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், அத்தியாவசியமற்ற நேரங்களில் இடம்பெறும் சேவைகளைக் கட்டுப்படுத்துமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக லங்கா தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர்...
கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, விவேகன்ஸ் 87/88 சாதாரண தரம் மற்றும் 90/91 உயர்தர முன்னாள் மாணவர்களால் நிர்மாணிக்கப்பட்ட நாட்டியப் பயிற்சி கலையரங்கம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலை தனது நூற்றாண்டு...
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையின் ஊடாக எரிபொருள் ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான QR குறியீடு நடைமுறை தற்போது முழுமையாக மீளமைக்கப்பட்டு, இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இத்திட்டம் தற்போது தடையின்றி இயங்கி...
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலையை எதிர்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து சிறப்பு கலந்துரையாடல் இன்று (15) மதியம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
மத்திய கிழக்கில் நிலக்கரி, எரிவாயு, எண்ணெய் போன்ற எரிசக்தி...
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டு முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு ஏற்படும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதி பாதுகாப்புப் பொறுப்பதிகாரியான...