உள்நாடு

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம்
அடுத்த சில நாட்களில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு ஏதுவான வளிமண்டலச் சூழல் உருவாகிவருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் ஊவா...

ஐயப்ப புனித யாத்திரிகர்களின் காப்புறுதி விவகாரம்: புதிய திட்டம் தொடர்பில் பாராளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல் — விரைவில் நற்செய்தி
இந்தியாவிற்குப் புனித யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களுக்குப் பயனளிக்கக்கூடிய காப்புறுதித் திட்டத்தை முன்னெடுப்பது குறித்தும், அவர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்தும் பாராளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல்...

சாமரவுக்கும், அவரது பிரத்தியேக செயலாளருக்கும் மீண்டும் விளக்கமறியல்
ஊழல் குற்றச்சாட்டொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சுமதிபால லியனாராச்சி ஆகியோரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை...

தொடர்ந்தும் சரியும் தங்கம் விலை
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதுடன், தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,526 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இதற்கமைய, உலகச் சந்தையில் தங்கத்தின் விலை 3,500 டொலர் எல்லையை அண்மித்துள்ளது.
இந்த...
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக சிலாபம் வரையிலும், மாத்தறை முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பரப்புகளுக்காக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.p
குறிப்பிட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது...
உண்டியல் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்ட 19 வயது இளைஞன் கைது
பணச்சலவை தடுப்புச் சட்டத்தின்கீழ் 19 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் (உண்டியல் முறையில்) பணப் பரிவர்த்தனை செய்யும் நபர் ஒருவர் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கொலை...
டெங்கு மரணங்கள் 69 ஆக அதிகரிப்பு
நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்வடைந்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அண்மைக்கால தரவுகளின்படி, இவ்வருடத்தில் இதுவரை மொத்தம் 92,854 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பதிவாகியுள்ள மொத்த நோயாளர்களில்...
முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டையை வெளியிட நடவடிக்கை
தற்போது வழங்கப்பட்டுள்ள அனைத்து தேசிய அடையாள அட்டைகளுக்கும் பதிலாக, எதிர்வரும் சில வருடங்களுக்குள் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் மயமாக்கல்...
PTA க்கு பதிலாக கொண்டுவரப்படும் புதிய சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி
1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட 'பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை'...
22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தில்!
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது உள்ளடங்கலாக அரசியலமைப்பிற்கான 22 வது திருத்தம் மற்றும் நீதித்துறைச் சட்டத்திற்கான திருத்தம் என்பன நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.






