நிரூபமா ராஜபக்ஷவின் சொத்து பெறுமதி (photos)

சட்டவிரோதமாக வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் பினாமி சொத்துக்கள் வாங்கிக் குவித்த பிரபலங்களின் பெயர்களை “பன்டோரா ஆவணங்கள்” அண்மையில் வெளியிட்டுள்ளன. அதற்கமைய பன்டோரா ஆவணங்களை வெளிப்படுத்திய முறையில் நிரூபமா ராஜபக்ஷவிடம்  35,000,000,000 ரூபாய் சொத்துக்கள் உள்ளதென ஐக்கிய...

ஜனாதிபதி தலைமையில் விசேட  அமைச்சரவைக் கூட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் விசேட  அமைச்சரவைக் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உள்ளிட்டவை தொடர்பில் ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடளாவியரீதியில் இன்று ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தொழிற்சங்க நடவடிக்கைகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என ஆசிரியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய இலங்கையில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் இன்று நாடு முழுவதும் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கம் இதுவரையில் சில...

மின் விநியோகத்தடை மீண்டும் வழமைக்கு திரும்பியது

மின்சார விநியோகத்தடை மீண்டும் வழமைக்கு திரும்பியதாக மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டின் சில பகுதிகளில் இன்று(05) காலை மின்விநியோகத்தடை ஏற்பட்டது. குறிப்பாக தென் மாகாணத்திலும், பன்னிப்பிட்டிய, ரத்மலானை,...

நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசாக்கள் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் அனைவரினதும் அனைத்துவகையான விசாக்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, காலாவதியாகும் விசாக்கள் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் நவம்பர் 6ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என குடிவரவு மற்றும் குடியகல்வு...

சிரேஷ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹணவுக்கு புதிய பதவி

புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் உறுப்பினராக சிரேஷ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் இதற்கான நியமனக்கடிதம் இன்று வழங்கப்பட்டது.

நாட்டின் சில பகுதிகளில் மின்தடை

மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தென் மாகாணத்திலும், பன்னிப்பிட்டிய, ரத்மலானை, ஹொரணை, தெஹிவளை, மத்துகம ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் வழங்குவதில் தடையேற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின்...

கடவுச்சீட்டு வழங்கப்படுவது தொடர்பிலான அறிவித்தல்

குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பத்தரமுல்லை பிரதான அலுவலகத்தின் மூலமும் அதேபோன்று பிராந்திய அலுவலகங்களில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களுக்கு மாத்திரமே கடவுச்சீட்டுகள் வழங்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, அத்தியாவசிய தேவையுள்ள விண்ணப்பதாரர்களுக்கு...