இன்றைய தினம் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பணியாளர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் பல வரிகளை அறவிடுவதற்கான பொறுப்பை திறைசேரிக்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்கள் இந்த அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் தலைமை காரியாலய சேவையாளர்கள் மற்றும் மாவட்ட காரியாலயங்களின் சேவையாளர்களும் பங்கேற்றுள்ளனர்.
இதனால் வரி அறவிடும் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.