ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட மரபணு பகுப்பாய்வில் இலங்கையில் தற்போது பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்களில் 95 வீதத்திற்கும் அதிகமானோர் ஒமிக்ரோன் திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் படுவன்துட்டாவ குறிப்பிட்டார்.
கடந்த சில நாட்களாக கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு ஒமிக்ரோன் மாறுபாடே காரணமாக இருக்கலாம் எனவும் சுகாதாரத் துறை சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்படி, கொரோனா வைரஸிலிருந்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும், கோவிட் நோய்த்தொற்றால் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் இறப்புகளைக் குறைக்க பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளுமாறும் மேலும் அவர் வலியுறுத்தினார்.