தற்போதைய ஜனாதிபதிக்கு அரசியல் அனுபவம் குறைவு என்பதால், சில அரசியல் விடயங்களை காலம் கடந்து புரிந்துகொள்கிறார்.அரசாங்கத்தின் தவறுகளையும் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி விமர்சிக்கும் அமைச்சர்கள் நீக்கப்பட்டு வரும் நிலைமையில், சரியானதை சரி எனவும் தவறானதை தவறு எனவும் நேரடியாக பேசும் தானும் எதிர்காலத்தில் வனஜீவராசிகள் ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது என விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.