தேர்தல் வெற்றிக்காக அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் ஈஸ்டர் தாக்குதலுக்கான பிரதான சூத்திரதாரிகளை கண்டறிவதும் அதில் முன்னிலைக் காரணியாக இருந்தது எனவும்,இந்த ஆர்வ உறுதிமொழி பெரும் குழப்பத்தையும் சந்தேகத்தையும் இன்று ஏற்படுத்தியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உயிர்களைப் போன்று அவர்களின் இரத்திலும்,பினத்திலும் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்திற்கு இவ்வாறான ஈஸ்டர் சூழ்ச்சியாளர்களை கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,ஆனால் நடப்பது மந்தமான மற்றும் சந்தேகத்திற்குரிய விசாரணை செயல்முறையாகும் எனவும் தெரிவித்தார்.
பொரளையில் உள்ள அனைத்து புனிதர்களின் தேவாலய கட்டிடத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக அன்மையில் தகவல் வெளியாகி இருந்ததோடு,இது தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் இன்று (19) காலை தேவாலயத்திற்குச் சமூகமளித்தார்.இதன் போதே அவர் இவ்வாறானதொரு கருத்தை முன் வைத்தார்