Breaking Extreme Weather ஹட்டன் – கொழும்பு வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிப்பு

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் பல இடங்களில் மண்மேடுகள் சரிந்து விழுந்தமையினால் அவ்வீதியூடான போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

​ மண்மேடுகளும், பாறைகளும் வீதியில் சரிந்து வீழ்ந்துள்ளமையினால், ஹட்டனிலிருந்து கினிகத்தேனை, நாவலப்பிட்டி, கண்டி மற்றும் கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வாகனங்களுக்கும், அத்திசைகளிலிருந்து ஹட்டன் நோக்கி செல்லும் வாகனங்களுக்கும் போக்குவரத்துக்கு தடைகள் ஏற்பட்டுள்ளன.

​ இதன்காரணமாக வீதியின் இருபுறமும் பெருமளவிலான வாகனங்கள் நீண்ட வரிசைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

​ மண்மேடுகளை அகற்றி வீதியின் போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவருவதற்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் பிரதேச மக்களும் இணைந்து செயற்படுகின்றனர்.

​ எவ்வாறாயினும், நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்திற் கொண்டு மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

​ அதேநேரம் கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கடுகன்னாவை பகுதியிலும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

சாமரவுக்கும், அவரது பிரத்தியேக செயலாளருக்கும் மீண்டும் விளக்கமறியல்

ஊழல் குற்றச்சாட்டொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சுமதிபால...

தொடர்ந்தும் சரியும் தங்கம் விலை

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதுடன், தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,526 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.   இதற்கமைய, உலகச்...