வவுனியா – மகாறம்பைக்குளத்தில் உள்ள வீடு ஒன்றிலும் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக
போலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இன்று அதிகாலை 1.45 மணியளவில் சமையலறையைப் பார்த்த போது எரிவாயு அடுப்பு வெடித்திருப்பதை அவதானித்தமையை அடுத்து உடனடியாக எரிவாயு சிலின்டர் இணைப்பினை கழற்றி காஸ் சிலின்டரினை பாதுகாப்பாக வெளியில் எடுத்து சென்றுள்ளமையால் அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸில் இன்றையதினம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
வவுனியா மாவட்டத்தில் 05வது காஸ் அடுப்பு சம்பவமாக இது பதிவாகியுள்ளது.