இன்று காலை வங்கதேசத்தில் ஏற்பட்ட படகுத் தீ விபத்தில் 32 பேர் பலியாகி உள்ளதாகவும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.படகில் பயணித்த பலர் ஆற்றில் குதித்து தப்பித்துள்ளனர்.
வங்கதேசத்தின் தெற்கு பகுதியில் தலைநகர் தோகாவில் இருந்து 250 கி.மீ தூரத்தில் ஜகாகதி பகுதியில் நடு ஆற்றில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. ஓபிஜான் 10 என்கிற மூன்றடுக்கு கொண்ட படகே இந்த தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இது குறித்து அப்பகுதி காவல்துறை தலைமை அதிகாரி மொய்னுல் தெரிவிக்கையில், “தற்போது வரை 32 பேரின் உடல்களை கண்டெடுத்துள்ளோம். பெரும்பான்மையானவர்கள் தீயினால் இறந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம்.”என்று குறிப்பிட்டுள்ளர்.