Date:

குளவி கூடுகளில் இருந்து அரியவகை குருவின் கூடுகள் மீட்பு

மனிதர்களுக்கோ விலங்குகளுக்கோ அணுக முடியாத 21 குளவி கூடுகளை பாதுகாப்பாக அகற்ற கண்டி பிங்கு வள பாதுகாப்பு அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

மகாவலி நதிக்கு அருகிலுள்ள பேராதனை பல்கலைக்கழகத்தின் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மேல் பகுதியில் தரை மட்டத்திலிருந்து 150 அடி உயரத்திற்கு மேல் கட்டப்பட்டிருந்த அரிய வகையான தகைவிலான் குருவியின் சுமார் 150 கூடுகளையும் பாதுகாத்து குளவி கூடுகளை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 60 ஆண்டு பழமையான இந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தை பழுது பார்க்க ஊழியர்களுக்கு ஒரு பெரிய ஆபத்தாகவே இருந்தது.

No description available.

இதனை நிர்வகிக்கும் பெராதனை பல்கலைக்கழகம் மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் நிறுவனம் ஆகியவை இனைந்து உச்சியில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தை பழுது பார்ப்பதற்காக குளவி கூடுகளை அகற்றுமாறு கண்டி பிங்கு வள பாதுகாப்பு அமைப்புக்கு கோரிக்கையை விடுத்திருந்தது.

அவ் இடத்திற்கு கண்கானிப்புக்கு வருகை தந்த அமைப்பின் தலைவரும், தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான மஹிந்த ஜயசிங்க மற்றும் அமைப்பின் செயலாளர் திஸ்ஸ பன்டார தம்பவிட, குளவி கூடுகளை சுற்றி அதிகளவில் தகைவிலான் குருவி கூடுகளையும் கான முடிந்ததாக. இது குறித்து பிங்கு வள பாதுகாப்பு அமைப்பு வனவிலங்குத் துறையிடம் விசாரித்த போது, இந்த அரிய வகை தகைவிலான் குருவி மிகவும் பாதுகாக்கப்பட்ட வேண்டிய விலங்கு என்றும், இக் குருவி கூட்டைத் தொடுவது, இக் குருவியை கொண்டு செல்வது மற்றும் வைத்திருப்பது ஆயுள் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்று குறிப்பிட்டதாகவும்.

No description available.

அதன்பிறகு, 9 ஆம் திகதி இன்று இந்த சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கிய அமைப்பின் தலைவரும், தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான மஹிந்த ஜயசிங்க தலைமையிலான குழு, அந்த இடத்திற்குச் சென்று, இந்த தகைவிலான் குருவி கூடுகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் குளவி கூடுகளை மற்றும் அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக முடித்த பின்னர், மஹிந்த டி ஜயசிங்க கூறுகையில், மனிதனுக்கோ அல்லது விலங்குகளுக்கோ நெருங்க முடியாத ஒரு ஆபத்தான விடயத்தை நிறைவேற்றுவது போராட்டமிக்க சவாலான விடயம் என்றும், எங்களுது சங்க உறுப்பினர்கள் அதை மிக வெற்றிகரமாக மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.

– கண்டி நிருபர்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிரிட்டிஷ் பிரதமர் கொடூரமான ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு விருதுவழங்கி, இஸ்ரேலியர்களை தண்டிக்கிறார்

பிரிட்டிஷ் பிரதமர் கொடூரமான ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு விருதுகளை வழங்கி,  பாதிக்கப்பட்ட இஸ்ரேலியர்களை...

இலங்கையர்களுக்கு 90 நாள் இலவச on-arrival விசாக்களை வழங்கும் மாலைத்தீவு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் மாலைதீவு விஜயத்திற்கு இணையாக, சுற்றுலா நோக்கங்களுக்காக மாலைதீவுக்குச்...

லலித், குகன் விவகாரம்: சாட்சியமளிக்க கோட்டா தயார்

மனித உரிமை ஆர்வலர்களான லலித் மற்றும் குகன் காணாமல் போனது தொடர்பான...

ரோஹித அபேகுணவர்தனவின் மகள், கைது

‘ரத்தரங்’ என்றழைக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள், கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான...