Date:

தடுப்பூசிகளை வழங்க ஜப்பான் இணக்கம்

ஆறு இலட்சம் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளைப் பெற்றுத்தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ   ஜப்பான் பிரதமர் யொசிஹிடே சுகாவிடம் (Yoshihide Suga) முன்வைத்த கோரிக்கைக்குச் சாதகமான பதில் கிடைக்கப்பெற்றுள்ளது, என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் சுகியாமா அக்கிராவுக்கும் (Sugiyama Akira) இடையில், நேற்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இதுபற்றி தெரிவிக்கப்பட்டது.

கொவிட் வைரஸ் தொற்றொழிப்பு, மருத்துவ மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு உபகரணங்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கைக்கு ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

சமுத்திர அனர்த்தம் தொடர்பில் விரைவாகப் பதிலளிப்பதற்குத் தேவையான தொழிநுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் ஜனாதிபதி, ஜப்பான் தூதுவரின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸை வாங்க 6 முதலீட்டாளர்கள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை கொள்வனவு செய்வதற்கான ஏலத்தில் இலங்கையைச் சேர்ந்த மூன்று முதலீட்டாளர்கள்...

ரொஷான் ரணசிங்கவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டி

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக...

பாடசாலை போஷாக்கு திட்டத்திற்காக பகிர்ந்தளிக்கப்பட்ட அரிசி தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் விளக்கம்

மனிதப் பாவனைக்கு உகந்ததென உறுதி செய்யப்பட்ட அரிசி மாத்திரமே, பாடசாலை போஷாக்கு...

ஈரான் ஜனாதிபதி நாளை நாட்டுக்கு

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்களுக்கு கையளிக்க ஈரான் ஜனாதிபதி...