உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்காக பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்றங்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் கடந்த வாரம் அமைச்சரவை பத்திரத்தைச் சமர்ப்பித்ததாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எனினும், இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லையென தெரியவருகிறது.
2017ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவிக் காலம் எதிர்வரும் பெப்ரவரி மாதத்துடன் நிறைவடையவுள்ளது.
இந்நிலையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒரு வருட காலத்திற்கு ஒத்திவைப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்றங்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.