இரத்தம் தானம் செய்வோம் உயிரைக் காப்பாற்றுவோம் எனும் தொனிப்பொருளில் மாபெரும் இரத்ததான முகாம் நுவரெலியா YMMA சங்கதினால் ஏற்பாடு செய்யப்பட்டது .
சனிக்கிழமை காலை 8 – 30 மணி முதல் நண்பகல் 3 மணி வரை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இம் இரத்ததான முகாமில் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்றோர் கலந்துகொண்டு சமூக இடைவெளியுடன் இரத்ததானம் செய்தனர்.
குறித்த இரத்ததான முகாமில் கலந்து கொண்டு இரத்ததான வழங்கியவர்களுக்கு பாராட்டுச் சன்றிதழ் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இவ் இரத்தங்களை சேகரிப்பதற்கு நுவரெலியா பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வைத்தியர்கள் அதன் ஊழியர்கள் என பலரும் கலந்து இணைந்துக்கொண்டனர் கடந்த காலங்களிலும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இவ்வாறான இரத்த தானம் மற்றும் ஏனைய சமூக நல நடவடிக்கைகளில் இவ் அமைப்பினர் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
-டி.சந்ரு செ.திவாகரன்-