பாகிஸ்தான், சியல்கொட் பகுதியில் கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் உடல், லாஹூர் விமான நிலையத்திலிருந்து பாகிஸ்தான் நேரப்படி 12 மணிக்கு இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளது.
அதற்கமைய, உடலை தாங்கிவரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் யூஎல். 186 என்ற விமானம், இலங்கை நேரப்படி பிற்பகல் 5 மணியளவில் கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் என பாகிஸ்தானிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.