சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இலங்கை இளைஞர் ஒருவர், சமூக ஊடகத்தில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 30 இலட்சம் சவூதி ரியால் (SAR) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மட்டக்களப்பைச் சேர்ந்த சிவராசா அனோஜன் என்ற இளைஞரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த அவர், இணையத்தில் இடம்பெற்ற விவாதம் ஒன்றில் பங்கேற்றபோது, இஸ்லாமிய மத நம்பிக்கைகள் மற்றும் நபிகள் நாயகம் குறித்து அவமதிக்கும் வகையில் பேஸ்புக் பதிவொன்றில் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
நீதிமன்ற விசாரணைகளுக்குப் பின்னர், அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் 30 இலட்சம் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


