Date:

பெண்களுக்கு எதிரான தகாத வார்த்தை பிரயோகம்- திஸ்ஸ குட்டியராச்சிக்கு எச்சரிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியராச்சியினால், நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினிகுமாரி விஜேரத்ன மற்றும் வெளியில் உள்ள பெண் ஒருவர் தொடர்பில் கூறப்பட்ட தகாத வார்த்தை தொடர்பில் சபாநாயகர், திஸ்ஸ குட்டியராச்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்கள் இடம்பெறுமானால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார். நாடாளுமன்றம் இன்று கூடியநிலையில் சபாநாயகர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

இவ்வாறான விடயங்கள் எதிர்காலத்தில் இடம்பெறுவதை தடுக்கும் வகையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர்கள், தமது உறுப்பினர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கவேண்டும் என்றும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

இதன்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள, இந்த விடயம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினரிடம் இருந்து பதிலைப் பெறவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்தநிலையில் குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி, தாம் கூறிய தகாத சொல் என்ன என்பதை குறித்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வெளிப்படையாகக் கூறவேண்டும் என்று கோரினார்.

இதன்போது உரையாற்றிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் தலைவரான ராஜாங்க அமைச்சர் சுதா்சினி பெர்ணான்டோபுள்ளே, நாடாளுமன்ற உறுப்பினா்கள் எவரும் வெளியில் உள்ள ஒருவாின் பெயரைக் குறிப்பிட்டு உரையாற்றக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்

இதனையடுத்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியராச்சி தவறு இழைத்துள்ளார் என்பதை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ள நிலையிலேயே அவரை சபாநாயகர் எச்சரித்துள்ளார்.

எனவே தவறை ஏற்றுக்கொண்டு திஸ்ஸ குட்டியராச்சி, நாடாளுமன்ற உறுப்பினர் நிலையில் இருந்து விலகவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதன்போது ஆளும் கட்சியின் உறுப்பினர்களும் எதிர்கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பதற்றநிலை தோன்றியது.

இதனையடுத்து உரையாற்றிய குற்றச்சாட்டை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினிகுமாரி விஜேரட்ன, திஸ்ஸ குட்டியாராச்சி தம்மை அச்சுறுத்துவதாக சபாநாயகாிடம் முறையிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரணில் எம்.பி ஆவாரா?: ருவன் அதிரடி பதில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நேரத்தில் பாராளுமன்றத்தில் இருந்தால் அது...

உக்ரேன் மீது 800 ட்ரோன்களை ஏவிய ரஷ்யா

உக்ரேன் - ரஷ்யா மோதல் தொடங்கியதில் இருந்தே இதுதான் மிகப் பெரிய...

மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் நாளை முதல் எச்சரிக்கை

ஆபத்தான வகையில் மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக நாளை முதல்...

பாடசாலை நேரங்களில் கனிமப் போக்குவரத்துக்கு தடை

பாடசாலை நாட்களில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளை தடை விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புவியியல்...