Date:

ஒருபோதும் நடக்காது -எரி சக்தி அமைச்சர்

அந்நிய செலாவணியை முகாமைத்துவம் செய்யும் போது, கச்சாய் எண்ணெயை இறக்குமதி செய்து, சுத்திகரிப்பதை விட சுத்திகரிப்பு செய்த எரிபொருளை இறக்குமதி செய்வது இலாபகரமானது என எரி சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே  எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய அவர்,

அமைச்சராக தான் பதவி வகிக்கும் வரை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தனியார்மயப்படுத்தப்படமாட்டாது என எரி சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மேலும் டொலர் பிரச்சினை ஏற்பட்டால், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை மூட நேரிடும் என தான் கடந்த செப்டம்பர் மாதம் கூறியதாகவும் கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை முன்னதாக நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்த ஹேசா விதானகே, எண்ணெய் சுத்தகரிப்பு ஆலை சம்பந்தமாக நாட்டு மக்களுக்குள் ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், அது குறித்த விடயங்களை தெளிவுப்படுத்துமாறு கோரியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று சரிந்துள்ள தங்க விலை

கடந்த இரு நாட்களாக தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழாத நிலையில்...

6 நாடுகளை வாங்கிய பாலிவுட் நடிகை

கவர்ச்சி நடிகை தீபிகா படுகோனே மெட்டா AI உடன் ஒரு புதிய...

நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

2025 ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார்...

மூன்றாம் தவணை முதலாம் கட்டம் நாளையுடன் நிறைவு!

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல்...